

மின்துறை தலைமை அலுவலகத்தில் 18 ஹார்ட் டிஸ்குகள் திருடப்பட்ட விவகாரம் தொடர்பாக அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம் அளித்துள்ளார்.
மேலும், தூர சக்தியை பேர சக்தி காப்பாற்ற முயற்சிக்கிறதா என்ற அதிமுக பொதுச்செயலாளரின் கருத்து தொடர்பான கேள்விக்கு அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம் அளித்துள்ளார்.
ஹார்ட் டிஸ்குகள் மாயமான விவகாரத்தில் யாரையும் காப்பாற்றும் நோக்கம் இல்லை. யார் தவறு செய்திருந்தாலும் தண்டனை நிச்சயம்.
திருடப்பட்ட ஹார்ட் டிஸ்குகளில் உள்ள தரவுகளை மீட்க முடியும்.
ஹார்ட் டிஸ்குகள் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டவரிடம் போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.
ரூ.8 லட்சம் மதிப்பிலான டிரான்ஃபார்மரை ரூ.13 லட்சத்திற்கு வாங்க ஒப்பந்தம் பெறப்பட்டது எப்படி?
ஒரு மெகாவாட் மின்சாரத்திற்கு புரோக்கர்களுக்கு ரூ.25 முதல் ரூ.30 லட்சம் கமிஷன்.
மேகதாது விவகாரத்தில் தமிழ்நாடு தொடர்ந்து அரசியல் செய்வதாக கர்நாடக முதல்வர் கூறியது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்துள்ளார்.
மேகதாது விவகாரத்தில் சட்டரீதியாக நடவடிக்கை எடுத்து தமிழகத்தின் உரிமை பாதுகாக்கப்படும்.
இருமாநில உறவை கெடுக்கும் வகையில் கர்நாடக முதல்வரின் கருத்து உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.