கருக்கலைப்பில் ஈடுபட்ட கணவன்-மனைவி கைது

மருத்துவ குழுவினர் பசுமை நகருக்கு விரைந்து சென்று சோதனை செய்தனர்.கைது செய்யப்பட்ட 2 பேரையும் திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
கைது செய்யப்பட்ட கணவன், மனைவி
கைது செய்யப்பட்ட கணவன், மனைவி
Published on

ஜோலார்பேட்டை:

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த பசுமை நகரில் சட்ட விரோதமாக கருவில் இருப்பது ஆணா?, பெண்ணா? என கண்டறிந்து பணம் பறிப்பதாக, மருத்துவம் மற்றும் ஊரக நல பணிகள் இணைய இயக்குனர் கண்ணகிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன் பேரில் மருத்துவ குழுவினர் பசுமை நகருக்கு விரைந்து சென்று சோதனை செய்தனர். அப்போது திருப்பத்தூர் அடுத்த ராச்சமங்கலம் பகுதியைச் சேர்ந்த துரைசாமி மகன் ஐயப்பன் (வயது 29) மற்றும் அவருடைய மனைவி கங்காகவுரி (27) ஆகிய 2 பேரும் வாடகை வீட்டில், சட்டவிரோதமாக கருவில் இருப்பது ஆணா?, பெண்ணா? என பரிசோதித்து பணம் பறித்து வந்ததும் தெரிய வந்தது.

பின்னர் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து எந்திரத்தையும் பறிமுதல் செய்தனர்.

கைது செய்யப்பட்ட 2 பேரையும் திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com