வீட்டுமனை முறைகேடு: அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிரான வழக்கு ரத்து

வீட்டுமனை ஒதுக்கீட்டில் முறைகேடு என முந்தைய அதிமுக ஆட்சியில் வழக்கு தொடரப்பட்டது.அமைச்சர் ஐ.பெரியசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
வீட்டுமனை முறைகேடு: அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிரான வழக்கு ரத்து
Published on

அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிரான வீட்டுமனை முறைகேடு வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஐபிஎஸ் அதிகாரி ஜாபர்சேட்டின் மனைவி உள்பட சிலருக்கு வீட்டுமனை ஒதுக்கீட்டில் முறைகேடு என முந்தைய அதிமுக ஆட்சியில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு மீதான விசாரணைக்கு பிறகு அமைச்சர் ஐ.பெரியசாமி தவிர மற்றவர்கள் மீதான வழக்கு உச்சநீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றத்தால் ஏற்கனவே ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தனக்கு எதிரான வழக்கை ரத்து செய்யக்கோரி அமைச்சர் ஐ.பெரியசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு மீதான விசாரணையின்போது, அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிரான வீட்டுமனை முறைகேடு வழக்கை ரத்து செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com