சென்னையில் அதிகபட்சம்..! தமிழகத்தில் இன்று 9 இடங்களில் வெயில் சதம்

புதுச்சேரி 101.84, காரைக்கால் 100.04 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவு.
சென்னையில் அதிகபட்சம்..! தமிழகத்தில் இன்று 9 இடங்களில் வெயில் சதம்
Published on

தமிழகத்தில் இன்று 9 இடங்களில் வெயில் சதமடித்த நிலையில் அதிகபட்சமாக சென்னை நுங்கம்பாக்கத்தில் 103.46 டிகிரி பாரன்ஹீட் பதிவாகியுள்ளது.

பரங்கிப்பேட்டை, கடலூர் 102.92, வேலூர் 102.74, திருத்தணி, தொண்டி, நுங்கம்பாக்கத்தில் 102.2 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.

நாகை 102.02, தஞ்சாவூர் 100.4 மற்றும் புதுச்சேரி 101.84, காரைக்கால் 100.04 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.

இதற்கிடையே, நீலகிரி, தென்காசி, நெல்லை மாவட்டங்களில் இரவு 10 மணி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com