கவரப்பேட்டை ரெயில் விபத்து: உதவி எண்கள் அறிவிப்பு

விபத்து குறித்து தகவல்களை அறிந்துகொள்ள உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரலில் இருந்து செல்லும் விரைவு ரெயில்கள் நிறுத்தம்
கவரப்பேட்டை ரெயில் விபத்து: உதவி எண்கள் அறிவிப்பு
Published on

திருவள்ளூர்:

மைசூரில் இருந்து பீகார் மாநிலம் தர்பங்காவுக்கு பாக்மதி விரைவு ரெயில் சென்றுகொண்டிருந்தது. திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை அருகே ரெயில் வந்துகொண்டிருந்தபோது, அங்கு ஏற்கனவே நின்றுகொண்டிருந்த சரக்கு ரெயிலின் பின்னால் வேகமாக வந்து மோதியதில் விபத்து ஏற்பட்டது.

வேகமாக மோதியதால் ரெயில் பெட்டிகள் தடம் புரண்டு 2 பெட்டிகள் எரிந்தன. பயணிகள் விரைவு ரெயிலின் 4 ஏசி பெட்டிகள் தடம் புரண்டுள்ளதாகத் தகவல் வெளியாகியது.

விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள், போலீசார் மற்றும் உள்ளூர்வாசிகள் சம்பவ இடத்திகு விரைந்து வந்து போராடி தீயை அணைத்தனர்.

இந்த விபத்து காரணமாக சென்னை சென்ட்ரலில் இருந்து டெல்லி செல்லும் தமிழ்நாடு விரைவு ரெயில், தன்பந்த் விரைவு ரெயில் ஆகியவை நிறுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், விபத்து குறித்து தகவல்களை அறிந்து கொள்வதற்கான உதவி எண்களை தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

044-25330952, 044-25330953, 044-25354995 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு விவரங்களை அறிந்துகொள்ளலாம் என தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com