தமிழகத்தில் இன்று ஏழு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளிளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவள்ளூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் விடுமுறை அளிக்கப்படவில்லை.
தமிழகத்தில் இன்று ஏழு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
Published on

வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய ஏழு மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

நேற்று இரவு முதல் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கடலூர், மயிலாடுதுறை, விழுப்புரம், அரியலூர், நாகை, தஞ்சை, திருவாரூர் ஆகிய 7 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளிளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவள்ளூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com