இளைஞர் மரணம்- கிண்டி கலைஞர் மருத்துவமனையை உறவினர்கள் முற்றுகை

முறையான சிகிச்சை அளிக்கவில்லை என இளைஞரின் உறவினர்கள் புகார் அளித்துள்ளனர்.மருத்துவமனை நிர்வாகிகளுடன் உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இளைஞர் மரணம்- கிண்டி கலைஞர் மருத்துவமனையை உறவினர்கள் முற்றுகை
Published on

சென்னை:

கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விக்னேஷ் (31) என்ற இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இதனால் அவரது உறவினர்கள் இளைஞருக்கு முறையான சிகிச்சை அளிக்கவில்லை என மருத்துவமனையை முற்றுகையிட்டுள்ளனர்.

இளைஞர் உயிரிழந்து விட்டதால் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கண்ணீருடன் மருத்துவமனை அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

இதே மருத்துவமனையில் நேற்று முன்தினம் தான் மருத்துவர் மீது கத்திக்குத்து சம்பவம் நடந்தது. அதற்குள் மீண்டும் அதே மருத்துவமனையில் முற்றுகை போராட்டம் நடைபெற்றதால் அங்கு பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com