பாரதிராஜா மறைவு- கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் இரங்கல்

கிராமிய வாழ்வையும் மனித உணர்வுகளையும் உண்மைத் தன்மையுடன் வெளிப்படுத்திய அவரது படைப்புகள் தமிழ் திரைப்பட உலகில் அழியாத தடம் பதித்துள்ளன.
பாரதிராஜா மறைவு- கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் இரங்கல்
Published on

சென்னை:

இயக்குநர் இமயம் பாரதிராஜா உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். பாரதிராஜா மறைவு திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. சென்னை நீலாங்கரையில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள பாரதிராஜா உடலுக்கு அரசியல் தலைவர்கள், திரையுலகினர், ரசிகர்கள் என பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இதனிடையே, பாரதிராஜா மறைவுக்கு தமிழக கவனர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக கவர்னர் வெளியிட்டுள்ள செய்தியில்,

"புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்கள் மறைவால் மிகுந்த துயரமடைந்தேன். கிராமிய வாழ்வையும் மனித உணர்வுகளையும் உண்மைத் தன்மையுடன் வெளிப்படுத்திய அவரது படைப்புகள் தமிழ் திரைப்பட உலகில் அழியாத தடம் பதித்துள்ளன. அவரின் குடும்பத்தினருக்கும் திரையுலகினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள். அவரது ஆன்மா சாந்தியடையட்டும்" என்று கூறியுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com