கரூர் கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்ட அரசுப்பணி ரத்து!

சாலை விபத்து, பட்டாசு வெடிவிபத்து என உயிரிழப்பவர்கள் அனைவருக்கும் அரசுவேலை தரமுடியுமா?
கரூர் கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்ட அரசுப்பணி ரத்து!
Published on

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கரூரில் தவெகவின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அப்போது விஜய்யை காண ஒரேநேரத்தில் அதிகளவிலான மக்கள் திரண்டதால் கூட்டநெரிசல் ஏற்பட்டு, அதில் சிக்கி பிஞ்சு குழந்தை உட்பட 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இச்சம்பவம் அப்போது இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவுசெய்யப்பட்டு, தற்போது சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.

இந்நிலையில் கடந்த 10ம் தேதியன்று கரூருக்கு சென்ற முதலமைச்சர் விஜய், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் ஒருவருக்கு அரசு பணிக்கான நியமன ஆணையை வழங்கினார். தகுதியுடைய 31 பேருக்கு அரசுப்பணியும், ஒருவருக்கு ரூ.10 லட்சம் பணமும் வழங்கினார்.

இந்த பணி நியமன ஆணைகளுக்கு பெரும் கண்டனங்களும், விமர்சனங்களும் எழுந்தன. ஒருதரப்பினர் இதனை ஆதரிக்கவும் செய்தனர். இந்நிலையில் இந்த பணி வழங்கலை எதிர்த்து நாதக மற்றும் மஜக தரப்பு நிர்வாகிகள் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

இந்தமனு விசாரணை இன்று நடைபெற்ற நிலையில், உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கியது செல்லாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தினந்தோறும் சாலை விபத்தில், பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலர் உயிரிழக்கின்றனர். அவர்களுக்கெல்லாம் அரசு வேலை வழங்க முடியுமா? என்றும் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

சாதாரண அரசு வேலையே வழங்கப்பட்டதாக அரசுத்தரப்பு வைத்த வாதத்திற்கு, “எந்தப் பணியும் சாதாரணம் அல்ல; ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் உதவும் பணியே” என்றும் நீதிபதிகள் பதில் அளித்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com