முதலீட்டாளர் மாநாட்டில் நிவாரணம் வழங்கிய கோத்ரேஜ் நிறுவனம்

மத்திய அமைச்சர் பியூஷ்கோயலுக்கு ஜல்லிக்கட்டு காளை நினைவுப் பரிசை வழங்கினார்.உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பல்வேறு நிறுவனங்கள் கோடிகளை கொட்டி முதலீடு.
முதலீட்டாளர் மாநாட்டில் நிவாரணம் வழங்கிய கோத்ரேஜ் நிறுவனம்
Published on

உலக முதலீட்டாளர் மாநாட்டை இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா வரவேற்புரை ஆற்றினார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய ஜவுளி, வர்த்தக தொழில்துறை மந்திரி பியூஷ்கோயலுக்கு ஜல்லிக்கட்டு காளை நினைவுப் பரிசை வழங்கினார். இதைத்தொடர்ந்து மத்திய மந்திரி பியூஷ் கோயல் உரையாற்றினார்.

இதையடுத்து உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பல்வேறு நிறுவனங்கள் கோடிகளை கொட்டி முதலீடு செய்துள்ளன.

இந்நிலையில், உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் மிச்சாங் புயல் பேரிடர் நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.5 கோடிக்கான காசோலையை கோத்ரேஜ் நிறுவனத்தின் தலைவர் நிசாபா வழங்கினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com