கோவை அருகே 300 ஆண்டுகள் பழமையான கோவிலில் அம்மன் சிலை சேதம்

உடனடியாக அங்கு ஊர் மக்கள் திரண்டனர். இதன் காரணமாக அங்கு பரபரப்பு ஏற்பட்டது.பழமையான கோவிலில் அம்மன் சிலையை உடைத்து சென்ற மர்மநபரை தேடி வருகின்றனர்.
கோவை அருகே 300 ஆண்டுகள் பழமையான கோவிலில் அம்மன் சிலை சேதம்
Published on

கோவை:

கோவை காருண்யா நகர் அருகே நல்லூர் வயல்பதி என்ற மலைவாழ் மக்களின் கிராமம் உள்ளது.

இந்த கிராமத்தில் 300 ஆண்டுகள் பழமையான சடையாண்டியப்பன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பூசாரியாக ராம் கணேஷ் (வயது28) என்பவர் இருந்து வருகிறார்.

இவர் வாரத்தில் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழைமைகளில் கோவிலுக்கு சென்று பூஜை செய்வது வழக்கம். அதன்படி பூசாரி ராஜ்குமார் நேற்று காலை 10.30 மணியளவில் கோவிலுக்கு பூஜை செய்வதற்காக சென்றார்.

அப்போது கோவில் உள்ள பூமாரியம்மன் சாமி சிலையில் தலை மற்றும் இடது கை ஆகியவை சேதப்படுத்தப்பட்டு உடைந்து கிடந்தது.

சிலையை யாரோ மர்மநபர் உடைத்து சென்றது தெரிய வந்தது. இது குறித்து பூசாரி ராஜ்குமார் ஊர் மக்களுக்கு தகவல் தெரிவித்தார்.

உடனடியாக அங்கு ஊர் மக்கள் திரண்டனர். இதன் காரணமாக அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இந்த தகவல் கிடைத்ததும் காருண்யாநகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது ஊர் பொதுமக்கள் அம்மன் சிலையை உடைத்தவரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

இது குறித்து காருண்யா நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மலைவாழ் கிராமத்தில் 300 ஆண்டுகள் பழமையான கோவிலில் அம்மன் சிலையை உடைத்து சென்ற மர்மநபரை தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com