ஆழ்துளை கிணறு, மின்மோட்டார் பொருத்தும் மானியத்தை உயர்த்த வேண்டும்- ஜி.கே.வாசன் அரசுக்கு கோரிக்கை

மின்மோட்டார் அமைக்க ரூ. 75 ஆயிரம் வரையும் செலவு செய்ய வேண்டியுள்ளது. மானியத்தை உயர்த்தி வழங்கவும் தமிழக அரசு முன்வர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்
ஆழ்துளை கிணறு, மின்மோட்டார் பொருத்தும் மானியத்தை உயர்த்த வேண்டும்- ஜி.கே.வாசன் அரசுக்கு கோரிக்கை
Published on

சென்னை:

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஆழ்துளை கிணறு அமைக்க சுமார் ரூ. 9 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரையும், மின்மோட்டார் அமைக்க ரூ. 75 ஆயிரம் வரையும் செலவு செய்ய வேண்டியுள்ளது. ஆழ்துளை கிணறு அமைக்க, மின் மோட்டார் அமைக்க வேளாண் துறை மூலம் மானியமாக சுமார் ரூ. 15 ஆயிரம் முதல் ரூ. 25 ஆயிரம் வரை வழங்கப்படுகிறது. இது போதுமானதல்ல என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

ஆண்டு முழுவதும் மழைக்காலம், வெயில்காலம் என எக்காலத்திலும் விவசாயம் செய்ய தண்ணீர் பற்றாக்குறை இருக்கக் கூடாது என்பதற்காக இடத்திற்கு ஏற்ப புதிய கிணறு அல்லது புதிய ஆழ்துளை கிணறு ஆகியவற்றை அமைக்க விவசாயிகளுக்கு மானியத்தை உயர்த்தி கொடுத்தால் விவசாயிகள் பயன்பெறுவார்கள்.

விவசாயிகள் பம்பு செட் அமைக்கவும், மோட்டார், பைப்லைன், ஆழ்துளை கிணறு அமைக்கவும் மற்றும் நீர் பாசனத்திற்கு தேவையான அனைத்து கருவிகளை வாங்கவும், டிராக்டரை விருப்பப்படும் நிறுனங்களில் வாங்கவும், இவற்றிற்காக மானியத்தை உயர்த்தி வழங்கவும் தமிழக அரசு முன்வர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு ஜி.கே. வாசன் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com