நாய்கள் கடித்ததில் சிறுமி படுகாயம்: உரிமையாளர் கைது

நாய்களை பூங்காவுக்குள் அழைத்து வந்த உரிமையாளரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.சிறுமியின் சிகிச்சை செலவை ஏற்பதாக நாய்களின் உரிமையாளர் புகழேந்தி கூறினார்.
நாய்கள் கடித்ததில் சிறுமி படுகாயம்: உரிமையாளர் கைது
Published on

சென்னை:

சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள மாநகராட்சி பூங்காவுக்குள் விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுமியை 2 நாய்கள் கடித்ததில் பலத்த காயம் அடைந்தார். சிறுமியை காப்பாற்றச் சென்ற தாயையும் நாய்கள் கடித்தது.

நாய்கள் கடித்ததால் தலையில் படுகாயங்களுடன் சிறுமி சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் நாய்களை பூங்காவுக்குள் அழைத்து வந்த உரிமையாளரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

இந்த விவகாரம் தொடர்பாக நாய்களின் உரிமையாளர் புகழேந்தி மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.

இதைத்தொடர்ந்து சிறுமியின் சிகிச்சை செலவை ஏற்பதாக நாய்களின் உரிமையாளர் புகழேந்தி கூறினார்.

படுகாயம் அடைந்த சிறுமி, ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் இருந்து அப்பல்லோ மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com