கோடியக்கரை கடற்கரையில் 150 கிலோ எடை கொண்ட ராட்சத டால்பின் கரை ஒதுங்கியது

டால்பின் சுமார் 7 அடி நீளம், 150 கிலோ எடை கொண்டதாக இருக்கும்.இறந்து கரை ஒதுங்கிய ராட்சத டால்பினை மீனவர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் ஏராளமானோர் பாாத்து சென்றனர்.
கோடியக்கரை கடற்கரையில் 150 கிலோ எடை கொண்ட ராட்சத டால்பின் கரை ஒதுங்கியது
Published on

வேதாரண்யம்:

நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் அருகே கோடியக்கரை கடற்பரப்பில் ஏராளமான டால்பின் மீன்கள் உள்ளன. இவை ஆழமான கடற்பரப்பில் மட்டுமல்லாமல் கரையோர பகுதிகளுக்கும் வந்து மீன்களை உண்பது வழக்கம்.

அந்த வகையில், மீன்பிடி சீசன் காலமான அக்டோபர் முதல் மார்ச் மாதம் வரை கடற்கரை ஓரத்தில் அதிகளவில் டால்பின் மீன்கள் காணப்படும். இந்நிலையில் இன்று அதிகாலை கோடியக்கரை புதிய கலங்கரை விளக்கம் அருகே ராட்சத டால்பின் மீன் ஒன்று இறந்த நிலையில் கரை ஒதுங்கி உள்ளது.

இதனை கண்ட அவ்வழியாக சென்றவர்கள் உடனடியாக இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் டால்பின் மீனை கடலோரத்தில் இருந்து கரைக்கு இழுத்து வந்தனர். தொடர்ந்து, வனத்துறையினர் கூறுகையில், இந்த டால்பின் சுமார் 7 அடி நீளம், 150 கிலோ எடை கொண்டதாக இருக்கும்.

X

Maalai Malar
www.maalaimalar.com