லிஃப்டில் சிக்கிய கேலோ இந்தியா விளையாட்டு வீராங்கனைகள்

லிஃப்ட் முதல் தளம் அருகே சென்ற போது தொழில்நுட்ப கோளாறு காரணமாக பாதியில் நின்றது. சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள், சிக்கிய வீராங்கனைகளை பத்திரமாக மீட்டனர்.
லிஃப்டில் சிக்கிய கேலோ இந்தியா விளையாட்டு வீராங்கனைகள்
Published on

சென்னை கோயம்பேட்டில் உள்ள பிரபல நட்சத்திர விடுதியில், கேலோ இந்தியா விளையாட்டு போட்டியில் பங்கேற்க வந்த மேற்கு வங்கத்தை சேர்ந்த 23 வீராங்கனைகள் தங்கி இருந்தனர். கால்பந்து போட்டியின் முதல் சுற்றில் வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது சுற்று இன்று நடைபெற உள்ளது. விளையாட்டில் கலந்துகொள்ள 5வது தளத்தில் இருந்து லிஃப்ட் மூலம் 10 -க்கும் மேற்பட்ட வீராங்கனைகள் சென்றனர். லிஃப்ட் முதல் தளம் அருகே சென்ற போது தொழில்நுட்ப கோளாறு காரணமாக பாதியில் நின்றது.

விடுதி ஊழியர்கள் கடப்பாறை உள்ளிட்ட கருவிகளை வைத்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். விடுதி ஊழியர்களின் முயற்சி பலன் அளிக்காத நிலையில், தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள், இயந்திரங்கள் மூலம் லிஃப்டை உடைத்து, சிக்கிய வீராங்கனைகளை பத்திரமாக மீட்டனர். இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. மேலும் இந்த விபத்து குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com