கர்நாடகாவில் முழு ஊரடங்கு: வெறிச்சோடி காணப்பட்ட தமிழக-கர்நாடக எல்லை

ஒமைக்ரான் மற்றும் கொரோனா தொற்று மீண்டும் வேகமாக பரவுவதால் கர்நாடகாவில் கடுமையான கட்டுபாடுகள் விதித்தது. இதனால் தமிழக-கர்நாடக எல்லை பகுதியில் இன்று அனைத்து கடைகளும் மூடப்பட்டு மக்கள் நடமாட்டமின்றி காணப்பட்டன.
அத்திபள்ளியில் கடைகள் அடைக்கப்பட்டு இருந்ததை படத்தில் காணலாம்.
அத்திபள்ளியில் கடைகள் அடைக்கப்பட்டு இருந்ததை படத்தில் காணலாம்.
Published on

ஒசூர்:

ஒமைக்ரான் மற்றும் கொரோனா தொற்று காரணமாக சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் ஊரடங்கை கர்நாடக அரசு அறிவித்தது. இதன்படி நேற்று இரவு 10 மணி முதல்  ஊரடங்கு அமலுக்கு வந்தது. 

இன்று காலை கர்நாடக மாநிலம் முழுவதும்  ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் ஓசூர் அருகே கர்நாடக எல்லையான அத்திபள்ளி பகுதியில் அனைத்து கடைகள், மதுபான கடைகள், வர்த்தக நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டு இருந்தன.

இதனால் அப்பகுதி வழக்கம்போல் இல்லாமல் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டன.

X

Maalai Malar
www.maalaimalar.com