பொன்னேரி வியாபாரிகள் சங்கம் சார்பில் இலவச மருத்துவ முகாம்

முகாமை பொன்னேரி முன்னாள் எம். எல். ஏ. சிறுனியம் பலராமன் துவக்கி வைத்தார்.பல்வேறு நோய்களுக்கு இலவசமாக பரிசோதனை செய்து மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டது.
பொன்னேரி வியாபாரிகள் சங்கம் சார்பில் இலவச மருத்துவ முகாம்
Published on

பொன்னேரி:

பொன்னேரி நகர அனைத்து வியாபாரி கள் சங்கம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட் சிட்டி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவ மனை இணைந்து நடத்திய இலவச பொது மருத்துவ முகாம் பொன்னேரியில் வியாபாரிகள் சங்க தலைவர் பத்மநாபன் தலைமையில் நடைபெற்றது. இதில் பொது மருத்துவம், சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், இ.சி.ஜி., பெண்கள், குழந்தைகளுக்கான மருத்துவம், கண், மூக்கு, காது, தொண்டை உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு இலவசமாக பரிசோதனை செய்து மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டது.

முகாமை பொன்னேரி முன்னாள் எம். எல். ஏ. சிறுனியம் பலராமன் துவக்கி வைத்தார். முகாமில் பொது செயலாளர் அப்துல் காதர், பொருளாளர் பிரகாஷ் சர்மா, மருத்துவமனை துணைவேந்தர் டாக்டர் நாராயண பாபு, மருத்துவ கண்காணிப்பாளர் முனியப்பன் , பொன்னேரி காவல் ஆய்வாளர் வடிவேலு முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com