செந்தில் பாலாஜியின் உடல் நிலையில் முன்னேற்றம்

சிறையில் இருந்த செந்தில் பாலாஜிக்கு நேற்று திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது.இ.சி.ஜி., எக்கோ, எக்ஸ்ரே போன்ற பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டன.
செந்தில் பாலாஜியின் உடல் நிலையில் முன்னேற்றம்
Published on

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சிறையில் உள்ளார்.

இந்த மனு இன்று விசாரணைக்கு வரும் நிலையில், சிறையில் இருந்த செந்தில் பாலாஜிக்கு நேற்று திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து அவரை பலத்த பாதுகாப்புடன் சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அதன் பிறகு அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ஓமந்தூரார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். ஏற்கனவே அவர் இருதய அறுவைச் சிகிச்சை செய்து கொண்டவர் என்பதால் அது தொடர்பான மருத்துவ பரிசோதனைகளை டாக்டர்கள் மேற்கொண்டனர். இ.சி.ஜி., எக்கோ, எக்ஸ்ரே போன்ற பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டன.

இதில் செந்தில் பாலாஜியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். பரிசோதனைகள் அனைத்தும் முடிந்த பிறகு அவரது டிஸ்சார்ஜ் பற்றி முடிவு செய்யப்படும் என்று அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com