கால்பந்து வீராங்கனை மரணம்- தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது மனித உரிமைகள் ஆணையம்

ரத்த ஓட்டம் தடைப்பட்டதால் அறுவை சிகிச்சை மூலம் காலை அகற்றிவிட்டனர். கவனக்குறைவான சிகிச்சை தொடர்பாக 2 மருத்துவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
கால்பந்து வீராங்கனை மரணம்- தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது மனித உரிமைகள் ஆணையம்
Published on

சென்னை:

சென்னை வியாசர்பாடியை சேர்ந்த ரவிக்குமார்- உஷாராணி தம்பதியின் மகள் பிரியா (வயது17). கால்பந்து வீராங்கனையான இவர் மூட்டு வலி சிகிச்சைக்காக பெரியார் நகர் அரசு ஆஸ்பத்திரியில் ஆபரேஷன் செய்து கொண்டார். அதன்பிறகும் கால் வலி அதிகரித்ததால் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் மேல்சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவரது வலது காலில் ரத்த ஓட்டம் தடைப்பட்டதால் அறுவை சிகிச்சை மூலம் அவரது காலை அகற்றிவிட்டனர்.

அதன்பிறகு அவரது உடல்நிலை படிப்படியாக மோசம் அடைந்து நேற்று பிரியா பரிதாபமாக இறந்து விட்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக 2 மருத்துவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கால்பந்து வீராங்கனை பிரியா மரணம் குறித்து மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது. பிரியா மரணம் தொடர்பாக 6 வாரங்களில் விரிவான அறிக்கை தாக்கல் செய்யும்படி சுகாதாரத்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com