பிரியாணி கடையில் சோதனை நடத்திய உணவு பாதுகாப்பு அதிகாரி- வியாபாரி தீக்குளிக்கப்போவதாக மிரட்டல்

கடந்த 10 நாட்களுக்கு முன் தான் இதே கடையில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை நடத்தி சென்று இருந்தனர். கடையில் இருந்த வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
வியாபாரி தமின் அன்சாரி
வியாபாரி தமின் அன்சாரி
Published on

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் அடுத்த புத்தேரி பகுதியில் பிரியாணி கடை நடத்தி வருபவர் தமின் அன்சாரி. நேற்று இரவு 8 மணியளவில் கடையில் வியாபாரம் நடந்து கொண்டிருந்தபோது பாதுகாப்புத்துறை அதிகாரி சந்திரசேகரன் என்பவர் மட்டும் கடைக்கு வந்து திடீர் சோதனை நடத்தினார்.

விற்பனை செய்யப்படும் உணவு பொருட்கள் மீது புகார் வந்திருப்பதாக தெரிவித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த தமின் அன்சாரி எதிர்ப்பு தெரிவித்தார். கடந்த 10 நாட்களுக்கு முன் தான் இதே கடையில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை நடத்தி சென்று இருந்தனர். மீண்டும் சோதனையில் ஈடுபட்டதால் மனவேதனை அடைந்த தமின்அன்சாரி தனது குடும்பத்தினை கடைக்கு வரவழைத்து பெட்ரோல் பாட்டிலுடன் தீக்குளிக்கப் போவதாக மிரட்டல் விடுத்தார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் சோதனை குறித்த ஆய்வு அறிக்கையை கடையின் சுவரில் அதிகாரி ஒட்டிச் சென்றார். இதனால் கடையில் இருந்த வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com