குளிர்சாதன பெட்டியை திறந்த 5 வயது சிறுமி பலி

சிறுமியை மீட்ட பெற்றோர் ஆவடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சிறுமியை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர்.
குளிர்சாதன பெட்டியை திறந்த 5 வயது சிறுமி பலி
Published on

ஆவடி:

திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் மின்சாரம் பாய்ந்து, 5 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆவடியில் நந்தவன மேட்டூர் நேதாஜி தெருவை சேர்ந்த தம்பதி கவுதம்-பிரியா. இவர்களது மகள் ரூபாவதி (5), வீட்டில் இருந்த குளிர்சாதன பெட்டியை திறந்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்து, சிறுமி மயங்கி விழுந்தார்.

உடனடியாக சிறுமியை மீட்ட பெற்றோர் ஆவடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சிறுமியை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர்.

மின்சாரம் தாக்கி சிறுமி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக ஆவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com