ஒருதலை காதலில் விபரீதம்: இளம்பெண் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய 5 பேர் கைது

சின்ன கண்மாய் பகுதியைச் சேர்ந்த மணிரத்தினம் என்பவர், பிளஸ்-1 மாணவி ஒருவரை காதலித்து வந்தார்.மணிரத்தினம், தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து பெட்ரோல் அந்த மாணவி வீட்டின் மீது குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தியது தெரிய வந்தது.
ஒருதலை காதலில் விபரீதம்: இளம்பெண் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய 5 பேர் கைது
Published on

மதுரை:

மதுரை மேலஅனுப்பானடியில் உள்ள ஒரு வீட்டின் மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. இது தொடர்பாக தெப்பக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

இதில் சின்ன கண்மாய் பகுதியைச் சேர்ந்த மணிரத்தினம் என்பவர், பிளஸ்-1 மாணவி ஒருவரை காதலித்து வந்தார். இதனை அந்தப் பெண் ஏற்கவில்லை. எனவே மணிரத்தினம் தொடர்ந்து மாணவிக்கு டார்ச்சர் கொடுத்து வந்தார். எனவே அந்தப் பெண்ணின் குடும்பத்தினர், இது தொடர்பாக போலீசில் புகார் கொடுத்தனர். இதன் அடிப்படையில் போலீசார் மணிரத்தினத்தை கைது செய்தனர். அதன் பிறகு அவர் ஜாமீனில் வெளியே வந்தார்.

இந்த நிலையில் மணிரத்தினம் பிளஸ்-1 மாணவியை சந்தித்து, "காதலர் தினம் அன்று நீ என் காதலை ஏற்க வேண்டும். என்னுடன் வெளியே வர வேண்டும்" என்று கூறி உள்ளார். இதற்கு அந்தப் பெண் மறுத்ததோடு கண்டித்துள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த மணிரத்தினம், தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து பெட்ரோல் அந்த மாணவி வீட்டின் மீது குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தியது தெரிய வந்தது.

இதனைத் தொடர்ந்து இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மணிரத்தினம், மேலஅனுப்பானடி, வாசுகி தெரு வேல்முருகன் மகன் பார்த்தசாரதி (வயது 19), ஜெய், திலீப், ஜவகர் ஆகிய 5 பேரையும் தெப்பக்குளம் போலீசார் கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com