இலங்கையில் மீனவர்கள் கருப்பு கொடியுடன் போராட்டம்: ராமேசுவரம் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கை

படகுகள் பறிமுதல் செய்யப்படுவதுடன் இரண்டாவது முறையாக கைது செய்யப்படும் மீனவர்களுக்கு சிறை தண்டனையும் விதிக்கப்படுகிறது.பெரும்பாலான படகுகள் எச்சரிக்கை காரணமாக கரை திரும்பி உள்ளனர்.
இலங்கையில் மீனவர்கள் கருப்பு கொடியுடன் போராட்டம்: ராமேசுவரம் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கை
Published on

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் பகுதியில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள், இலங்கை கடற்பகுதியில் அத்துமீறி நுழைந்து மீன் பிடிப்பதாக கூறி சமீப காலமாக தொடர்ந்து கடற்படையினர் கைது செய்து வருகின்றனர். இதில், படகுகள் பறிமுதல் செய்யப்படுவது டன் இரண்டாவது முறையாக கைது செய்யப்படும் மீனவர்களுக்கு சிறை தண்டனையும் விதிக்கப்படுகிறது.

இதனை கண்டித்து, ராமேசுவரம் பகுதி மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டம் மற்றும் உண்ணாவிரத போராட்டங்களை மேற்கொண்டனர். மேலும் இலங்கை மீனவர்கள் குறித்து அவதூறான கருத்துக்களை தெரிவித்ததாகவும் பரபரப்பு ஏற்பட்டது. கலெக்டர், சட்டமன்ற உறுப்பினர் நடத்திய சமரச பேச்சுவார்த்தையை ஏற்றுக் கொண்ட ராமேசுவரம் மீனவர்கள் தற்காலிகமாக போராட்டத்தை கைவிட்டு மீண்டும் கடலுக்கு சென்றனர்.

இதனை கண்டித்து, இலங்கை மன்னார், பேசாளை, நெடுந்தீவு பகுதி மீனவ சங்கத்தினர் கண்டனம் தெரிவித்ததுடன் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்பகுதிக்குள் வந்து மீன் பிடிப்பதை தடுக்க வேண்டும் என போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக இன்று இலங்கை மீனவர்கள் தங்களது படகுகளில் கருப்பு கொடியுடன் நடுக்கடலில் போராட்டம் அறிவித்துள்ளனர்.

இதனால் ராமேசுவரம், பாம்பன், மண்டபத்தில் இருந்து மீன்பிடிக்க செல் லும் மீனவர்களுக்கு மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறை அதிகாரிகள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரித்துள்ளனர். மேலும் பெரும்பாலான படகுகள் எச்சரிக்கை காரணமாக கரை திரும்பி உள்ளனர்.

ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் தடை செய்யப்பட்ட இரட்டைமடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடிக்கும் போது இலங்கை மீனவர்கள் பாதிக்கப்படுகின்றனர். இதனால் மீண்டும் மீனவர்கள் பிரச்சினை ஏற்படும். இதனை தடுக்க வேண்டும் என மீனவ சங்கத்தினர் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அதிகாரிகளிடம் பலமுறை மனுக்கள் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதன் காரணமாக இந்திய தமிழ் மீனவர்கள் இலங்கை தமிழ் மீனவர்களிடையே பெரும் மோதல் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனை தடுக்க குறுகிய மீன்பிடி கடல் பகுதியை கொண்ட ராமேசுவரம் பகு தியில் அரசின் அனுமதிக்கப்பட்ட வலைகளை பயன்படுத்துவது, அதிவேக படகுகளை மாற்று துறைமுகத்திற்கு கொண்டு செல்லுவது, எல்லை தாண்டி மீன்பிடிக்க செல்லுவதை கட்டுப்படுத்துவது, இந்திய-இலங்கை மீனவர்கள் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி இரு நாட்டு மீனவர்கள் ஏற்றுக் கொள்ளும் வகையில் மீன் பிடிக்க அனுமதிக்க வேண் டும் என மீனவ சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com