தூத்துக்குடியில் 2-வது நாளாக மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை

மீனவர்கள் இன்று 2-வது நாளாக கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.வானிலை மையம் எச்சரிக்கை குறித்து தூத்துக்குடி துறைமுகத்தில் மீனவர்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் 2-வது நாளாக மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை
Published on

தூத்துக்குடி:

தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் காற்று வீச்சு மாறுபாடு காரணமாக மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது.

இதனை தொடர்ந்து தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 265 விசைப்படகுகள் மூலம் வழக்கமாக செல்லக்கூடிய மீனவர்கள் மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் பெரியதாழை முதல் வேம்பார் வரை உள்ள மீனவர்கள் இன்று 2-வது நாளாக கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.

மேலும் வானிலை மையம் எச்சரிக்கை குறித்து தூத்துக்குடி துறைமுகத்தில் மீனவர்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com