நாகையில் 4 நாட்களுக்கு பிறகு மீன் பிடிக்க கடலுக்கு சென்ற மீனவர்கள்

1200 விசைப்படகுகளும், 6000 பைபர் படகுகளும் கரையோரம் பாதுகாப்பாக நிறுத்தி வைத்து இருந்தனர்.நான்கு நாட்களுக்கு பிறகு இன்று காலை நாகை மாவட்ட விசைப்படகு மீனவர்கள் மற்றும் பைபர் படகு கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.
வேதாரண்யம் பகுதியில் படகில் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.
வேதாரண்யம் பகுதியில் படகில் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.
Published on

நாகப்பட்டினம்:

வங்கக்கடலில் ஏற்பட்ட புயல் சின்னம் காரணமாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை தொடர்ந்து நாகை மாவட்ட மீன்வளத்துறையினர் ஆழ்கடல் செல்லும் விசைப்படகு மீனவர்கள் மற்றும் பைபர் படகு மீனவர்கள்கடலுக்கு செல்ல தடை விதித்தனர்.

இதனால் நாகை மாவட்டத்தில் அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம், நம்பியார்நகர், நாகூர், சிருதூர் வேளாங்கண்ணி விழுந்தமாவடி, புஷ்பவனம், கோடியக்ககரை வேதாரணியம் ஆற்காடுதுறை உள்ளிட்ட மீனவ கிராமங்களில் இருந்து மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. இதனால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மேலும் 1200 விசைபடகுகளும், 6000 பைபர் படகுகளும் கரையோரம் பாதுகாப்பாக நிறுத்தி வைத்து இருந்தனர்.

நேற்று ஹாமூன் புயல் கரையை கடந்ததை தொடர்ந்து அவர்களுக்கான தடையை மீன்வள துறையினர் விலக்கிக்கொண்டு நேற்று மாலை முதல் கடலுக்கு மீன் பிடிக்க செல்வதற்கான அனுமதி டோக்கன் வழங்கத் தொடங்கினர்.

இதனால் நான்கு நாட்களுக்கு பிறகு இன்று காலை நாகை மாவட்ட விசைப்படகு மீனவர்கள் மற்றும் பைபர் படகு கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.

முன்னதாக மீனவர்கள் அவர்களுக்கு தேவையான டீசல், ஐஸ் உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்களைபடகுகளில் ஏற்றினர். பின்னர் அவர்களின் இஷ்ட தெய்வமான கடல் மாதாவை வணங்கி கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com