நெல்லையில் 2-வது நாளாக மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

10 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவில்லை. 1,500 நாட்டு படகுகள் கடற்கரை ஓரங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
நெல்லையில் 2-வது நாளாக மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை
Published on

நெல்லை:

இந்திய வானிலை ஆய்வு மையம் மன்னார் வளைகுடா மற்றும் கன்னியாகுமரி கடல் பகுதிகளில் காற்றானது மணிக்கு 40 கிலோமீட்டர் முதல் அதிகபட்சமாக 55 கிலோமீட்டர் வரை வீசக்கூடும் என எச்சரிக்கை விடுத்திருந்தது. இதனால் நெல்லை மாவட்டத்தில் கனமழை முதல் மிக கனமழை வரையிலும் பெய்ய வாய்ப்புள்ளது என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து நெல்லை மாவட்டத்தில் நேற்று மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.

இந்நிலையில் இன்று 2-வது நாளாக மாவட்டத்தில் கூட்டப்புளி, பெருமணல், இடிந்தகரை, உவரி, கூத்தன்குழி, பஞ்சல், தோமையர்புரம் உள்ளிட்ட 10 மீனவ கிராமங்களில் உள்ள சுமார் 10 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவில்லை. இதனால் சுமார் 1,500 நாட்டு படகுகள் கடற்கரை ஓரங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com