ராமேசுவரம் கடல் பகுதியில் சூறை காற்று, கடல் கொந்தளிப்பால் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை

1,600-க்கும் மேற்பட்ட விசைப் படகுகளும், 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகிறது.மீன்பிடிக்க செல்வதற்கான அனுமதி டோக்கன் வழங்குவதும் நிறுத்தப்பட்டுள்ளது.
ராமேசுவரம் கடல் பகுதியில் சூறை காற்று, கடல் கொந்தளிப்பால் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை
Published on

ராமேசுவரம்:

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம், பாம்பன், மண்டபம், தொண்டி, சோளியகுடி, கீழக்கரை, ஏர்வாடி, மூக்கையூர் உள்ளிட்ட பகுதிகளில் 1,600-க்கும் மேற்பட்ட விசைப் படகுகளும், 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் கடந்த 4 நாட்களாக சூறைகாற்று வீசி வருகிறது. இன்றும் கடற்பகுதியில் காற்றின் வேகம் 55 கிலோ மீட்டர் முதல் 65 கிலோ மீட்டர் வரை இருக்கக்கூடும் எனவும், கடல் கொந்தளிப்பு இருக்கலாம் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதனால் மீனவர்களின் பாதுகாப்பு கருதி மறு உத்தரவு வரும் வரை மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அறிவுறுத்தி உள்ளது. மேலும் மீன்பிடிக்க செல்வதற்கான அனுமதி டோக்கன் வழங்குவதும் நிறுத்தப்பட்டுள்ளது.

ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகுகள் துறைமுகங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com