கோடிமுனையில் கடலில் மூழ்கி மீனவர் பலி

மீனவர்கள் விரைந்து சகாயராஜ் வள்ளத்தின் அருகே சென்றபோது வள்ளம் மட்டும் தனியாக நின்றது.கோடிமுனை கடற்கரைக்கு கொண்டு வரப்பட்டு ஆசாரிப்பள்ளம் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
கோடிமுனையில் கடலில் மூழ்கி மீனவர் பலி
Published on

குளச்சல்:

குளச்சல் அருகே கோடிமுனை மீனவர் கிராமத்தை சேர்ந்தவர் சகாயராஜ் (வயது 58). சம்பவத்தன்று நேற்று மாலை 5 மணி அளவில் தனது வள்ளத்தில் தனியாக மீன்பிடிக்க சென்றார். இன்று அதிகாலை சுமார் 3.30 மணியளவில் இந்த வள்ளத்தின் அருகே மீன்பிடித்து கொண்டிருந்த சக மீனவர்கள் அவரிடம் போனில் தொடர்பு கொண்டபோது எந்த தகவலும் கிடைக்கவில்லை. உடனே மற்ற மீனவர்கள் விரைந்து அவரது வள்ளத்தின் அருகே சென்றபோது வள்ளம் மட்டும் தனியாக நின்றது.

ஆனால் அவரை காணவில்லை. அவர் பிடித்து வைத்திருந்த மீன்கள் மட்டும் வள்ளத்தில் இருந்தது. உடனே மற்ற மீனவர்கள் சகாய ராஜை அருகில் சென்று தேடினர். அப்போது அவரது உடல் மிதந்த நிலையில் கடலில் கிடந்தது. உடனடியாக அவரது உடலை மீட்டு கோடிமுனை கடற்கரைக்கு கொண்டு வரப்பட்டு ஆசாரிப்பள்ளம் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சகாயராஜ் வள்ளத்தில் இருந்து தவறி விழுந்து இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com