சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 7 பேர் பலி

விபத்து ஏற்பட்ட ஆலையில் 10-க்கும் மேற்பட்ட அறைகள் உள்ளன.ஒவ்வொரு அறையிலும் 3 முதல் 4 தொழிலாளர்கள் வேலைப்பார்த்து வந்தனர்.
சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 7 பேர் பலி
Published on

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே செங்கமலப்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் இன்று மதியம் வெடி விபத்து ஏற்பட்டது. இதில் 7  தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 4 பேர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உராய்வு காரணமாக ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த ஆலையில் 10-க்கும் மேற்பட்ட அறைகள் உள்ளன. ஒவ்வொரு அறையிலும் தலா 3 முதல் 4 தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்தனர். மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு தொழிலாளர்கள் வேலைப்பார்த்து கொண்டிருந்தபோது உராய்வு காரணமாக வெடி விபத்து ஏற்பட்டது. இதில் நான்கு அறைகள் தரைமட்டமாகின.

தீயணைப்புப்படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com