வேலூர் ஜெயிலில் பெண் கைதி திடீர் உயிரிழப்பு

சுமதி கடந்த 2017-ம் ஆண்டு வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டார். சுமதிக்கு மனநலம் பாதிப்பு ஏற்பட்டது.
வேலூர் ஜெயிலில் பெண் கைதி திடீர் உயிரிழப்பு
Published on

வேலூர்:

திருவண்ணாமலை மாவட்டம் தூசியை சேர்ந்தவர் சுமதி (வயது 40). கடந்த 2017-ம் ஆண்டு வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டார். விசாரணை கைதியான இவர் வேலூர் பெண்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்தார். இவருக்கு மனநலம் பாதிப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சுமதி சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருந்தார்.

அங்கு சிகிச்சை பெற்று வந்த சுமதி நேற்று இரவு பரிதாபமாக இறந்தார். இது குறித்து பாகாயம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com