கொரோனாவில் இறந்த தந்தையின் ஆசையை நிறைவேற்றிய என்ஜினீயர்

அச்சு அசலாக தந்தையை போலவே இருக்கும் வகையில் சிலையை அமைத்தார். பன்னீர்செல்வம் சிலையின் முன்பாக காலில் விழுந்து மணமக்கள் ஆசிபெற்றனர்.
தந்தையின் மெழுகு சிலை அருகில் நின்று திருமணம் செய்த ஆரோக்கிய இயேசுராஜா உறவினர்களுடன் எடுத்துக்கொண்ட படம்.
தந்தையின் மெழுகு சிலை அருகில் நின்று திருமணம் செய்த ஆரோக்கிய இயேசுராஜா உறவினர்களுடன் எடுத்துக்கொண்ட படம்.
Published on

சேலம்:

சேலத்தை சேர்ந்தவர் ஆரோக்கிய இயேசு ராஜா. சிவில் என்ஜினீயர். இவரது தந்தை பன்னீர்செல்வம். இவர் கடந்த 2021-ம் ஆண்டு கொரோனாவால் உயிரிழந்தார். அவர் உயிருடன் இருக்கும்போது தனது மகன் ஆரோக்கிய இயேசுராஜாவுக்கு திருமணம் செய்து வைக்க ஆசைப்பட்டார். அவரது மறைவால் துக்கத்தில் ஆழ்ந்த ஆரோக்கிய இயேசுராஜா தந்தையின் கடைசி ஆசையை நிறைவேற்ற எண்ணினார்.

இதையடுத்து தந்தைக்கு ரூ.5 லட்சம் செலவில் மெழுகுசிலை உருவாக்கினார். அச்சு அசலாக தந்தையை போலவே இருக்கும் வகையில் அந்த சிலையை அமைத்தார். அந்த சிலையை தனது வீட்டில் வைத்து வணங்கினார்.

இந்த நிலையில், ஆரோக்கிய இயேசு ராஜாவுக்கும் - ஜூலியட் லதா என்பவருக்கும் திருமணம் நடந்தது. திருமண வரவேற்பு நிகழ்ச்சி நேற்றிரவு சீலநாயக்கன்பட்டியில் உள்ள ஒரு மண்டபத்தில் நடந்தது. மண்டபத்தில் இருக்கையில் தந்தையின் சிலையை அமர வைத்து திருமண ஜோடிகளுக்கு வரவேற்பு விழா நடந்தது.

அப்போது பன்னீர்செல்வம் சிலையின் முன்பாக காலில் விழுந்து மணமக்கள் ஆசிபெற்றனர். அதேபோல் உறவினர்களும் அந்த மெழுகு சிலை பார்த்து கண் கலங்கினர். பின்னர் அனைவரும் அருகில் நின்று போட்டோ எடுத்துக்கொண்டனர். இந்நிகழ்வு திருமண விழாவில் கலந்து கொண்டவர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com