மனைவி இறந்ததால் சோகம்: மகனை கழுத்தை அறுத்து கொன்று தந்தை தற்கொலை

தற்கொலை செய்து கொள்வதற்கு முன் ஸ்டீபன் ராஜ் தனது சகோதரிக்கு வாட்ஸ்-அப் மூலம் தகவல் அனுப்பி உள்ளார். அதில் மகனுடன் தனியாக வசித்து வருவதால் எனக்கு வாழ பிடிக்கவில்லை.
மனைவி இறந்ததால் சோகம்: மகனை கழுத்தை அறுத்து கொன்று தந்தை தற்கொலை
Published on

கடலூர் மாவட்டம் நெய்வேலி வடக்குத்து அண்ணா கிராமம் அரசமர தெருவை சேர்ந்தவர் முத்துக்குமார். இவரது மகன் ஸ்டீபன் ராஜ் (வயது29) கூலித்தொழிலாளி. இவரது மனைவி பவித்ரா.

இவர் கடந்த 2020-ம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார். இவர்களுக்கு எஸ்வந்த்ராஜ் என்கிற ஜெகதீஷ் என்ற 7 வயது மகன் இருந்து வந்தார். இவர் வடக்குத்து பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 2-ம்வகுப்பில் இருந்து 3-ம் வகுப்புக்கு செல்ல இருந்தார். மனைவி தற்கொலை செய்து கொண்டதால் ஸ்டீபன் ராஜ் தனது மகனுடன் தனியாக வசித்து வந்தார். இதனால் மனவேதனையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று நள்ளிரவில் ஸ்டீபன் ராஜ் தனது மகனை கத்தியால் கழுத்தை அறுத்தார். இதில் ஜெகதீஷ் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே இறந்தார். பின்னர் சமையலறைக்கு சென்ற ஸ்டீபன் ராஜ் அங்கிருந்த கயிற்றால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தற்கொலை செய்து கொள்வதற்கு முன் ஸ்டீபன் ராஜ் தனது சகோதரிக்கு வாட்ஸ்-அப் மூலம் தகவல் அனுப்பி உள்ளார். அதில் மகனுடன் தனியாக வசித்து வருவதால் எனக்கு வாழ பிடிக்கவில்லை. எனவே மகனை கொன்று தற்கொலை செய்து கொள்கிறேன் என கூறியிருந்ததாக தெரிகிறது.

இதனால் அதிர்ச்சியடைந்த அவரது சகோதரி இன்று அதிகாலை ஸ்டீபன் ராஜ் வீட்டிற்கு வந்து பார்த்த போது ஜெகதீஷ் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் உள்ளே சென்று பார்த்த போது ஸ்டீபன் ராஜ் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இது குறித்து நெய்வேலி டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ஸ்டீபன் ராஜ் மற்றும் ஜெகதீஷ் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து நெய்வேலி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பெற்ற மகனை தந்தையே கழுத்தறுத்து கொலை செய்து விட்டு தானும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நெய்வேலி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com