மகனுக்கு திருமண வாழ்வில் விருப்பம் இல்லாததை பயன்படுத்தி மருமகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மாமனார்

இந்த விஷயத்தை கணவரிடம் சொன்னால் கணவருடன் சேர்ந்து வாழ முடியாமல் செய்து விடுவேன் என்றும், 30 பவுன் நகை கூடுதல் வரதட்சணையாக கேட்டு மிரட்டல் விடுத்தார்.
மகனுக்கு திருமண வாழ்வில் விருப்பம் இல்லாததை பயன்படுத்தி மருமகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மாமனார்
Published on

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் 22 வயது பெண். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி கருத்துவேறுபாடு காரணமாக முதல் கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்றார். இதையடுத்து அந்த பெண், பள்ளப்பட்டி சிப்காட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வரும் காளீஸ்வரன் என்பவரை 2-வதாக திருமணம் செய்துள்ளார்.

திருமணத்தின் போது அந்த பெண் வீட்டார் சார்பில் குறைந்த அளவில் நகை, பணம் மற்றும் சீர்வரிசை பொருட்கள் தரப்பட்டன. இருந்தபோதிலும் அதனை ஒரு குறையாக தொடர்ந்து சுட்டிக்காட்டி வந்த கணவர் குடும்பத்தினர் பல்வேறு இடையூறுகளை அளித்து வந்தனர்.

இதற்கிடையே குடும்ப உறவு மற்றும் திருமண வாழ்க்கையில் காளீஸ்வரன் ஆர்வமின்றி இருந்துள்ளார். வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பியதும் அசதியில் தூங்கிவிடுவதாக கூறப்படுகிறது. இதனால் அந்த பெண்ணின் மனவாழ்க்கை மனஉளைச்சலில் இருந்து வந்துள்ளது.

ஆனாலும் கூடுதல் வரதட்சணை பெறுவதில் மாமனார் ராஜன், மாமியார் மணிமாலா ஆகியோர் குறியாக இருந்தனர். அப்போது அவர்களிடம் காளீஸ்வரன் குறித்து தெரிவித்துள்ளார். அதற்கு நீதான் உன் கணவரை வழிக்கு கொண்டு வரவேண்டும் என்று கூறியுள்ளனர்.

இந்தநிலையில்தான் பெண்ணின் மாமனார் ராஜன், மருமகளுக்கு ஆபாச வீடியோக்களை அனுப்பியுள்ளார். அதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த இளம்பெண்ணிடம் மாமனார் இதுபோன்ற வீடியோக்களை கணவரிடம் காண்பிக்குமாறும், அதன் மூலம் திருமண வாழ்க்கையை மகிழ்ச்சியானதாக மாற்றிக்கொள்ளுமாறும் தெரிவித்துள்ளார்.

பின்னர் இதுபற்றி மாமியார் மணிமாலாவிடம் கூறியபோது, அவர் இதுபற்றி வெளியில் யாரிடமும் கூறாதே, விஷயம் தெரிந்தால் குடும்ப மானம் போய் விடும் என்று பதில் அளித்துள்ளார். இந்த நிலையில் வேலைக்கு சென்ற தனது கணவரிடம் போனில் பேசி கொண்டிருந்த மருமகளிடம், மாமனார் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு தகாத முறையில் நடக்க முயற்சி செய்துள்ளார். அப்போது மாமனாரை தள்ளி விட்டு அறைக்குள் சென்று கதவை பூட்டிக்கொண்டார்.

இந்த விஷயத்தை கணவரிடம் சொன்னால் கணவருடன் சேர்ந்து வாழ முடியாமல் செய்து விடுவேன் என்றும், 30 பவுன் நகை கூடுதல் வரதட்சணையாக கேட்டு மிரட்டல் விடுத்தார். இதுபற்றி கணவரிடம் அந்த பெண் கூறியபோது, காளீஸ்வரன் அதனை கண்டு

கொள்ளவில்லை.

பின்னர் நடந்த சம்பவம் பற்றி, இளம்பெண் சமயநல்லூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் விசாரணை நடத்திய போலீசார் கணவர் காளீஸ்வரன், மாமனார் ராஜன், மாமியார் மணிமாலா ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து ராஜன், காளீஸ்வரனை கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com