குரூப் 2, குரூப் 2ஏ தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

போட்டித் தேர்வு அறிவிப்பை டி.என்.பி.எஸ்.சி. கடந்த மாதம் (ஜூன்) 20-ந்தேதி வௌியிட்டது.தேர்வுகள் வருகிற செப்டம்பர் மாதம் 14-ந்தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
குரூப் 2, குரூப் 2ஏ தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு
Published on

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.), அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை குரூப்-1, குரூப்-2, குரூப்-4 உள்பட பல்வேறு போட்டித் தேர்வுகள் வாயிலாக நிரப்பி வருகிறது.

அந்த வகையில், 2024ம் ஆண்டில், உதவி ஆய்வாளர், துணை வணிகவரி அலுவலர், வனவர் உள்பட பல்வேறு குரூப்-2 பதவிகளில் 507 காலிப்பணியிடங்களும், உதவியாளர், கணக்கர், நேர்முக உதவியாளர் உள்பட பல்வேறு குரூப்-2ஏ பதவிகளில் ஆயிரத்து 820 காலிப்பணியிங்கள் என மொத்தம் 2 ஆயிரத்து 327 காலிப்பணியிடங்கள் உள்ளன.

இதற்கான போட்டித் தேர்வு அறிவிப்பை டி.என்.பி.எஸ்.சி. கடந்த மாதம் (ஜூன்) 20-ந்தேதி வௌியிட்டது. குரூப்- 2 மற்றும் 2ஏ முதல் நிலை தேர்வுகள் வருகிற செப்டம்பர் மாதம் 14-ந்தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

குரூப்-2 மற்றும் 2ஏ போட்டித் தேர்வுகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் (வெள்ளிக்கிழமை) நிறைவடையும் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை வரை கால அவகாசத்தை நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

தொழில்நுட்பக் காரணங்களால் இணையவழியில் விண்ணப்பக் கட்டணம் செலுத்த முடியாததால் அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com