பழைய குற்றால அருவியில் குளிக்க அனுமதி நேரம் நீட்டிப்பு

ஏற்கனவே மாலை 5.30 மணிக்கு மேல் குளிக்க அனுமதி மறுப்பு.சுற்றுலா பயணிகள் மற்றும் வியாபாரிகளின் கோரிக்கையை ஏற்று மாவட்ட ஆட்சியர் உத்தரவு.
பழைய குற்றால அருவியில் குளிக்க அனுமதி நேரம் நீட்டிப்பு
Published on

தென்காசி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற முக்கிய சுற்றுலா தளமாக விளங்கிவரும் குற்றால அருவிகளில் ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதத்தில் சீசன் களை கட்டும் .

அப்போது அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும். இதில் குளிப்பதற்கு சுற்றுலாப் பயணிகள் ஆர்வம் காட்டுவர். தமிழ்நாடு மட்டுமின்றி அண்டை மாநிலங்களில் இருந்தும் அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் குற்றால அருவிகளுக்கு குளிக்க வருவர்.

இந்நிலையில், பழைய குற்றால அருவியில் இரவு 8 மணி வரை குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி, சுற்றுலா பயணிகள் தென்காசி பழைய குற்றால அருவியில் குளிக்க காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

பழைய குற்றால அருவியில் ஏற்கனவே மாலை 5.30 மணிக்கு மேல் குளிக்க அனுமதி மறுக்கப்பட்டு வந்த நிலையில், இரவு 8 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

சுற்றுலா பயணிகள் மற்றும் வியாபாரிகளின் கோரிக்கையை ஏற்று மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

இது, சுற்றுலா பயணிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com