பிறந்த குடும்பத்தில் இருந்து திருமணமான பெண்களை விலக்குவது நியாயமல்ல: உச்சநீதிமன்றம்

திருமணமான பெண்களை அவர்கள் பிறந்த குடும்பத்தில் இருந்து விலக்குவது நியாயமல்ல என்று உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
பிறந்த குடும்பத்தில் இருந்து திருமணமான பெண்களை விலக்குவது நியாயமல்ல: உச்சநீதிமன்றம்
Published on

உத்தர பிரதேசத்தை சேர்ந்த திருமணமான ஒரு பெண், தனது தந்தை நியாய விலைக்கடையில் பணியாற்றி இறந்து விட்டதால், கருணை அடிப்படையில் அந்த பணியை தனக்கு அளிக்குமாறு விண்ணப்பித்தார்.

ஆனால், மாநில அரசு அவருக்கு அப்பணியை அளிக்க மறுத்துவிட்டது. திருமணமான பெண்களை 'குடும்பம்' என்ற வரையறைக்குள் சேர்க்க முடியாது என்று கூறிவிட்டது. அதை எதிர்த்து அப்பெண் அலகாபாத் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். ஆயினும், கருணை அடிப்படையில் வேலை அளிக்க 'குடும்பம்' என்ற வரையறைக்குள் திருமணமான பெண்களை சேர்க்க முடியாது என்று கூறியது.

அந்த உத்தரவை எதிர்த்து அந்த பெண் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். அம்மனு. நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்மா. அலோக் அரதே ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அலகாபாத் ஐகோர்ட்டு உத்தரவை ரத்து செய்து, நீதிபதிகள் தெரிவித்த கருத்துகள் வருமாறு:-

கருணை அடிப்படையிலான பணி ஒதுக்கீடு என்பது, மறைந்த ஊழியரின் குடும்பத்துக்கு உடனடியாக நிதியுதவி செய்வதற்குத் தான். எனவே, திருமணமான பெண்களை 'குடும்பம்' என்ற வரையறைக்குள் சேர்க்க மறுப்பது ஏற்புடையதல்ல.

குறிப்பிட்ட பணியை செய்யும்திறன். இருப்பிடம், நிதி தேவை. குடும்பத்தை சேர்ந்தவர் ஆகிய அம்சங்களைத்தான் பரிசீலிக்க வேண்டும். அதை விட்டுவிட்டு. திருமண அந்தஸ்து என்பதற்கும், இந்த அம்சங்களுக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. திருமணமானவுடன் மகளுக்கும். அவரது பிறந்த குடும்பத்துக்கும் இடையிலான பந்தம் அறுபடும் என்று நினைப்பது சரியல்ல. திருமணமானவுடன் அவர் அந்த குடும்பத்தை சேர்ந்தவர் அல்ல என்று நினைப்பது அரசியல்சாசனரீதியாக அனுமதிக்கத்தக்கது அல்ல.

இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.

X

Maalai Malar
www.maalaimalar.com