முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் காவல் 32வது முறையாக நீட்டிப்பு

நீதிமன்ற காவல் இன்றுடன் நிறைவடையும் நிலையில் மீண்டும் நீட்டிப்பு.புழல் சிறையில் இருந்து காணொலி காட்சி மூலமாக ஆஜர்படுத்தப்பட்டார்.
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் காவல் 32வது முறையாக நீட்டிப்பு
Published on

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14-ந்தேதி அமலாக்கத்துறையால் செந்தில் பாலாஜி கைதானார். இதன்பின் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் இன்றுடன் நிறைவடையும் நிலையில் மீண்டும் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

புழல் சிறையில் இருந்து காணொலி காட்சி மூலமாக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் முன்பு செந்தில் பாலாஜி ஆஜர்படுத்தப்பட்டார்.

இந்நிலையில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 32வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, நீதிமன்ற காவலை ஏப்ரல் 17ம் தேதி வரை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com