நிர்மலா சீதாராமனிடம் கையில் காசில்லை, பையில் தான் இருக்கிறது- ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்

தன்னிடம் தேவையான பணம் இல்லை என்பதால் தேர்தலில் போட்டியிட மறுப்பு.நாட்டின் நிதியமைச்சரிடமே போட்டியிடுவதற்கான பணம் இல்லையா? என்று கேள்வி எழுந்தது.
நிர்மலா சீதாராமனிடம் கையில் காசில்லை, பையில் தான் இருக்கிறது- ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்
Published on

மத்திய நிதியமைச்சராக நிர்மலா சீதாராமன் உள்ளார். இவருக்கு தமிழ்நாடு அல்லது ஆந்திர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ள ஏதாவது ஒரு இடத்தில் மக்களவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுத்ததாகவும், தன்னிடம் தேவையான பணம் இல்லை என்பதால் மறுத்து விட்டதாகவும் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

நாட்டின் நிதியமைச்சரிடமே போட்டியிடுவதற்கான பணம் இல்லையா? என்று கேள்வி எழுந்தது.

இதற்கு பதில் அளித்த நிர்மலா சீதாராமன் "என்னுடைய சம்பளம், என்னுடைய சம்பாத்தியம், என்னுடைய சேமிப்பு எல்லாம் என்னுடையது. இந்தியாவின் ஒருங்கிணைந்த நிதி எனக்கு சொந்தம் கிடையாது" என்றார்.

இதுகுறித்து காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் கருத்து தெரிவித்துள்ளார்.

அப்போது அவர் கூறியதாவது:-

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கையில் காசில்லை. ஆனால் அவர் பையில், படுக்கை அறையில் பணம் உள்ளது.

இந்தியாவின் சர்வாதிகாரம் என அமெரிக்க, ஜெர்மனி கூறுவதை நிர்மலா சீதாராமனின் கணவரே ஆதரிக்கிறார்.

தேர்தல் ஆணையம் மோடியின் கைப்பாவையாக செயல்படுகிறது.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com