ஈரோடு இடைத்தேர்தல்: முழு வீச்சில் இறுதி கட்டப் பணிகள்

காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும்.வாக்குச்சாவடிகளில் அடிப்படை வசதிகளை மாநகராட்சி ஊழியர்கள் செய்து வருகின்றனர்.
ஈரோடு இடைத்தேர்தல்: முழு வீச்சில் இறுதி கட்டப் பணிகள்
Published on

ஈரோடு:

ஈரோடு இடைத்தேர்தல் பிரசாரம் நேற்றுடன் நிறைவடைந்துள்ள நிலையில் அங்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு இடைத்தேர்தல் நாளை 7 மணிக்கு வாக்கு பதிவு தொடங்குவதையொட்டி முழு வீச்சில் இறுதி கட்டப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள், விவிபேட் உள்ளிட்ட உபகரணங்களை அனுப்பும் பணியை மும்முரமாக ஊழியர்கள் ஏற்பாடுகளை செய்து கொண்டிருக்கிறனர். இந்நிலையில் வாக்குச்சாவடிகளில் அடிப்படை வசதிகளை மாநகராட்சி ஊழியர்கள் செய்து வருகின்றனர். காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். பதற்றமான 32 வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com