பொறியியல் கலந்தாய்வு: 63 ஆயிரத்து 843 பேருக்கு தற்காலிக ஒதுக்கீடு

பொதுப் பிரிவின்கீழ் 93 ஆயிரத்து 59 பேர் தகுதி பெற்றனர்.மாணவர்களுக்கு நாளை கல்லூரி ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்படும்.
பொறியியல் கலந்தாய்வு: 63 ஆயிரத்து 843 பேருக்கு தற்காலிக ஒதுக்கீடு
Published on

சென்னை:

தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான இணையவழி கலந்தாய்வு நடந்து வருகிறது. 3-வது சுற்று கலந்தாய்வு கடந்த 23-ந் தேதி தொடங்கியது. இதில் பங்கேற்க பொதுப் பிரிவின்கீழ் 93 ஆயிரத்து 59 பேர் தகுதி பெற்றனர்.

இந்நிலையில், நிர்ணயிக்கப்பட்ட கெடுவுக்குள் விருப்பமான கல்லூரி மற்றும் பாடப் பிரிவை தேர்வு செய்தவர்களில் பொதுப் பிரிவில் 58 ஆயிரத்து 889 பேர், 7.5 சதவீத ஒதுக்கீடு பிரிவில் 4 ஆயிரத்து 954 பேர் என மொத்தம் 63 ஆயிரத்து 843 பேருக்கு நேற்று காலை 10.30 மணிக்கு தற்காலிக ஒதுக்கீடு வழங்கப்பட்டது.

இதை உறுதி செய்ய அவர்களுக்கு இன்று மாலை 5.30 மணி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. தற்காலிக ஒதுக்கீட்டை உறுதிசெய்யும் மாணவர்களுக்கு நாளை காலை 10.30 மணிக்குள் கல்லூரி ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்படும் என தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலாளர் புருஷோத்தமன் தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com