ஏடிஎம்மில் மின்சாரம் தாக்கி வடமாநில வாலிபர் பலி

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சில பகுதிகளில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து முத்தையால் பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஏடிஎம்மில் மின்சாரம் தாக்கி வடமாநில வாலிபர் பலி
Published on

வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் இன்று மாமல்லபுரம்- மரக்காணம் இடையே கரையை கடக்கும் என்றும் இதனால் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களி அதி கனமழை பெய்யும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. அதன்படி சென்னையில் நேற்று இரவு தொடங்கிய மிதமான மழை நேரம் செல்ல கனமழையாக தற்போது வரை பெய்து வருகிறது.

இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி உள்ளது. மழைநீரை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டாலும் தொடர் மழை காரணமாக மழைநீர் தேங்குகிறது. இதனை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சில பகுதிகளில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், முத்தையால் பேட்டையில் உள்ள ஏமிஎம்-மில் பணம் எடுக்க சென்ற வடமாநில வாலிபர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். தனியார் வங்கி ஏடிஎம்மில் பணம் எடுக்கச் சென்ற உத்தரபிரதே மாநிலத்தை சேர்ந்த சந்தன் என்ற வாலிபர் இரும்பு கம்பியை பிடித்த போது மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து முத்தையால் பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com