பெரியகுளத்தில் மின்சாரம் தாக்கி கணவன், மனைவி உயிரிழப்பு

அரவிந்த் தனது தோட்டத்தில் 10க்கும் மேற்பட்ட மாடுகளை வைத்து பராமரித்து வருகிறார். வயலில் மின்சார வயர்கள் தாழ்வாக சென்று கொண்டிருந்தது.
பெரியகுளத்தில் மின்சாரம் தாக்கி கணவன், மனைவி உயிரிழப்பு
Published on

பெரியகுளம்:

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகில் உள்ள பங்களாபட்டி பெரியார்காலனியை சேர்ந்தவர் அரவிந்த் (வயது 34). இவர் பெரியகுளம் நகராட்சி கழிவுநீர் நீருந்து பணியாளராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி ஹேமாவதி (30). இவர்களுக்கு லக்ஷன் (3) என்ற மகனும், ஜெயஸ்ரீ (2) என்ற மகளும் உள்ளனர்.

அரவிந்த் தனது தோட்டத்தில் 10க்கும் மேற்பட்ட மாடுகளை வைத்து பராமரித்து வருகிறார். நேற்று இப்பகுதியில் பலத்த மழை பெய்தநிலையில் வயல் பகுதியில் தண்ணீர் தேங்கியது. மேலும் வயலில் மின்சார வயர்கள் தாழ்வாக சென்று கொண்டிருந்தது. இதனை கவனிக்காமல் ஹேமாவதி வயலில் தேங்கிய தண்ணீரை அகற்ற சென்றார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்டார்.

இதை பார்த்த அவரது கணவர் தனது மனைவியை காப்பாற்ற சென்றார். இதனால் அவர் மீதும் மின்சாரம் தாக்கியது. படுகாயம் அடைந்து கிடந்த அவர்களை அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு பெரியகுளம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து பெரியகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com