அமைச்சர் கே.என்.நேருவின் மகன் நிறுவனத்தில் 2-வது நாளாக தொடரும் ED Raid...

ஆர்.ஏ.புரத்தில் உள்ள அமைச்சர் நேருவின் சகோதரர் ரவிச்சந்திரனின் 2 இல்லங்களிலும் 2-வது நாளாக சோதனை நடைபெற்று வருகிறது. திருச்சி தில்லை நகரில் அமைச்சர் கே.என்.நேரு வீட்டில் 10 மணிநேரத்திற்கும் மேலாக நடைபெற்ற அமலாக்கத்துறையினரின் சோதனை நிறைவுபெற்றுள்ளது.
அமைச்சர் கே.என்.நேருவின் மகன் நிறுவனத்தில் 2-வது நாளாக தொடரும் ED Raid...
Published on

சென்னை:

தமிழக அமைச்சர் கே.என்.நேருவின் மகனும் பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி எம்.பி.யுமான அருண் நேரு மற்றும் அமைச்சரின் சகோதரர் ரவிச்சந்திரனுக்கு தொடர்புடைய 4 இடங்களில் இரண்டாவது நாளாக அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்படி, சென்னையில் அருண் நேரு தொடர்புடைய நிறுவனத்திலும், ஆர்.ஏ.புரத்தில் உள்ள அமைச்சர் நேருவின் சகோதரர் ரவிச்சந்திரனின் 2 இல்லங்களிலும் 2-வது நாளாக சோதனை நடைபெற்று வருகிறது.

முன்னதாக, திருச்சி தில்லை நகரில் அமைச்சர் கே.என்.நேரு வீட்டில் 10 மணிநேரத்திற்கும் மேலாக நடைபெற்ற அமலாக்கத்துறையினரின் சோதனை நிறைவுபெற்றுள்ளது. அதேபோல் கோவை மசக்காளிபாளையத்தில் அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் மணிவண்ணன் வீட்டில் நடைபெற்ற சோதனையும் நிறைவுபெற்றுள்ளது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com