அரசு இ-சேவை மைய ஊழியர்கள் உண்ணாவிரதம்

கடந்த ஆட்சி காலத்தில் நிறைவேற்ற வேண்டிய கோரிக்கைகளை நிறைவேற்றாமல் தள்ளிப் போடப்பட்டது. புதிய அரசும் காலம் தாழ்த்தாமல் உடனடியாக கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று நிர்வாகிகள் தெரிவித்தனர்.
சென்னை ராஜரத்தினம் மைதானத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள்.
Published on

மகப்பேறு விடுமுறை காலங்களில் ஊதியம் வழங்கிடு, ஆதார் சேவை மைய ஊழியர்களின் ஐடி முடக்கம் செய்வதை நிரந்தரமாக கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடந்தது.

போராட்டம்

தமிழ்நாடு தரவு உள்ளிட்டாளர்கள் சங்கம் சார்பில் எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் உண்ணாவிரத போராட்டம் இன்று நடந்தது.

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் அரசு இ-சேவை மையம் மற்றும் நிரந்தர ஆதார் சேர்க்கை மையத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் பணி நிரந்தரம் செய்ய வேண்டும், குறைந்தபட்ச மாத ஊதியம் ரூ.26 ஆயிரம் வழங்க வேண்டும், மகப்பேறு விடுமுறை காலங்களில் ஊதியம் வழங்கிடு, ஆதார் சேவை மைய ஊழியர்களின் ஐடி முடக்கம் செய்வதை நிரந்தரமாக கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடந்தது.

பலர் பங்கேற்பு

போராட்டத்திற்கு மாநில தலைவர் கோபி குமார் தலைமை தாங்கினார். சி.ஐ.டி. மாநில தலைவர் சுகுமாரன் தொடக்க உரையாற்றினார். மாநில பொதுச்செயலாளர் மனோஜ் குமார் கோரிக்கை உரையாற்றினார். மாலதி சிட்டிபாபு, குப்புசாமி, முருகேஷ், செந்தில்குமார், கண்ணன், சசிரேகா, சபரீஷ் சுகுமார் எம்எஸ் பாண்டி சையத் வினோலியா அப்துல் பால விநாயகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கடந்த ஆட்சி காலத்தில் நிறைவேற்ற வேண்டிய கோரிக்கைகளை நிறைவேற்றாமல் தள்ளிப் போடப்பட்டது. புதிய அரசும் காலம் தாழ்த்தாமல் உடனடியாக கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று நிர்வாகிகள் தெரிவித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com