3 மாதங்களில் சொன்னதை செய்து காட்டியுள்ளது த.வெ.க. அரசு- மரிய வில்சன்

விலையில்லா மின்சாரம் 200 யூனிட்களாக த.வெ.க அரசில் உயர்த்தப்பட்டுள்ளது.
marie wilson
Published on

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் இன்று தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசின் 2026-2027ஆம் நிதியாண்டுக்கான முதல் முழுமையான நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) இன்று (ஆகஸ்ட் 5, 2026) சட்டப்பேரவையில் காலை 10 மணிக்கு தாக்கல் செய்யப்பட்டது.

தவெக அரசின் நிதியமைச்சர் என்.மரிய வில்சன் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பட்ஜெட்டை சட்டப்பேரவையில் தாக்கல் செய்து உரை நிகழ்த்தி வருகிறார்.

தன்னை உயிராய் நேசிக்கும் மக்களுக்காக சூழ்ச்சிகளை வென்று ஜனநாயகனாக நிற்கும் முதலமைச்சருக்கு நன்றி. நன்றி கடன் செலுத்துவதற்காக மட்டும் அரசியலுக்கு வந்தவர் முதலமைச்சர் விஜய். பிறப்பால் அனைவரும் சமம் என்ற கோட்பாட்டுடன் மக்கள் மனதில் இடம்பிடித்துள்ளார் முதலமைச்சர்.

விலையில்லா மின்சாரம் 200 யூனிட்களாக த.வெ.க அரசில் உயர்த்தப்பட்டுள்ளது. தவெகவின் வெற்றி ஒரு கட்சியின் தனிப்பட்ட வெற்றி அல்ல, தமிழக மக்களின் வெற்றி..தவெக ஆட்சிக்கு வந்த பிறகு அனைத்து துறைகளிலும் கனிசமான வளர்ச்சி பெற்றுள்ளது. 3 மாதங்களில் சொன்னதை செய்து காட்டியுள்ளது த.வெ.க. அரசு மக்களுக்கு இடையூறாக இருந்த 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளது. என மரிய வில்சன் தெரிவித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com