மழைப்பொழிவு இல்லாததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது

பவானிசாகர் அணையில் இருந்து கீழ் பவானி வாய்க்கால் பாசனத்திற்கு 1800 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. அணைக்கு வினாடிக்கு 2 ஆயிரத்து 82 கன அடி நீர் வந்து கொண்டிருந்த நிலையில் இன்று 759 கன அடியாக குறைந்துள்ளது.
மழைப்பொழிவு இல்லாததால்  பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது
Published on

ஈரோடு:

ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது. இந்நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதியான நீலகிரி மலை ப்பகுதியில் கடந்த சில நாட்களாக மழைப்பொழிவு இல்லாததால் அணைக்கு நீர்வரத்து குறைந்து வந்தது. அதேநேரம் அணைக்கு வரும் நீர் வரத்தை விட பாசனத்திற்கு அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது.

இன்று காலை நிலவர ப்படி அணையின் நீர்மட்டம் 83.09 அடியாக உள்ளது. நேற்று அணைக்கு வினாடிக்கு 2 ஆயிரத்து 82 கன அடி நீர் வந்து கொண்டிருந்த நிலையில் இன்று 759 கன அடியாக குறைந்துள்ளது. பவானிசாகர் அணையில் இருந்து கீழ் பவானி வாய்க்கால் பாசனத்திற்கு 1800 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. தடப்பள்ளி- அரக்கன் கோட்டை பாசனத்திற்கு 700 கன அடியாக நீர் அதிகரித்து திறக்கப்பட்டுள்ளது. குடிநீ ருக்காக பவானி ஆற்றுக்கு 100 கன அடி என மொத்தம் 2 ஆயிரத்து 600 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

இதேபோல் குண்டேரி பள்ளம் அணை பகுதியில் பரவலாக மழை பெய்து வருவதால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி குண்டேரிப்பள்ளம் அணையின் நீர்மட்டம் 38.99 அடியாக உள்ளது. இதே போல் வரட்டு பள்ளம் அணை தனது முழு கொள்ளளவான 33.46 அடியில் தொடர்ந்து 17 நாட்களாக இருந்து வருகிறது.

இது ஒரு புறம் இருக்க பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது. 30 அடியாக இருக்கும் பெரும்பள்ளம் அணையின் நீர்ம ட்டம் இன்று காலை நிலவரப்படி 3.51 அடியாக குறைந்து உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com