குடிபோதையில் தகராறு: கணவன் அடித்து கொலை- மனைவி கைது

குடிபோதையில் தகராறு: கணவன் அடித்து கொலை- மனைவி கைது

தேவராஜ் குடித்துவிட்டு தொடர்ந்து மனைவியிடம் தகராறு செய்து வந்தார்.தேவராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
Published on

ராணிப்பேட்டை:

ராணிப்பேட்டை அடுத்த வி.சி.மோட்டூர் பகுதியை சேர்ந்தவர் தேவராஜ் (வயது 40) லாரி மெக்கானிகான இவர் டிரைவராகவும் வேலை பார்த்து வந்தார்.

இவரது மனைவி பானுமதி (34). இவர்களுக்கு கடந்த 15 வருடங்களுக்கு முன் திருமணமானது. ஒரு மகள், மகன் உள்ளனர்.

இந்நிலையில் தேவராஜ் குடித்துவிட்டு தொடர்ந்து மனைவியிடம் தகராறு செய்து வந்தார்.

இதனால் சண்டை போட்டுக்கொண்டு பானுமதி தனது தாய் வீடான வாலாஜா அடுத்த சின்னதகரகுப்பம் கிராமத்திற்கு சென்றார். 2 வருடங்களாக அங்கேயே வசித்து வந்தார். அங்கும் தேவராஜ் சென்று தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று இரவு சின்ன தகரகுப்பத்திற்கு சென்ற தேவராஜ் அங்கு மனைவி பானுமதியிடம் தகராறில் ஈடுபட்டார்.

மேலும் மனைவியை தாக்க முயன்றார். இதில் ஆத்திரமடைந்த பானுமதி கீழே கிடந்த கட்டையை எடுத்து தேவராஜை தாக்கினார். இதில் மயங்கி விழுந்த தேவராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இச்சம்பவம் குறித்து தகவலறிந்த வாலாஜா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர்.

தேவராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தேவராஜின் மனைவி பானுமதியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com