சென்னையில் ரூ.22 கோடி மதிப்பிலான போதை பொருள் பறிமுதல்

4 வெளிநாட்டவர் உள்பட 5 பேரை மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் விசாரணை.பயணி ஒருவரிடம் இருந்து 1.8 கிலோ கொக்கைன் பறிமுதல் செய்யப்பட்டது.
சென்னையில் ரூ.22 கோடி மதிப்பிலான போதை பொருள் பறிமுதல்
Published on

சென்னையில் ரூ.22 கோடி மதிப்பிலான கொக்கைன் மற்றும் எம்டிஎம்ஏ போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

சென்னையில் நடந்த இரண்டு வெவ்வேறு சம்பவத்தில் 1.8 கிலோ கொக்கைன் மற்றும் 1.4 கிலோ எம்டிஎம்ஏ போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

4 வெளிநாட்டவர் உள்பட 5 பேரை மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த 9ம் தேதி சென்னை விமான நிலையத்திற்கு வந்த பயணி ஒருவரிடம் இருந்து 1.8 கிலோ கொக்கைன் பறிமுதல் செய்யப்பட்டது. மற்றுமொரு சம்பவத்தில் 1.4 கிலோ எம்டிஎம்ஏ போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்நிலையில், கைது செய்யப்பட்டவர்களிடம் மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com