ஓட்டுநர் உரிமம் இனி விரைவு அஞ்சலில் மட்டுமே அனுப்பப்படும்: தமிழ்நாடு போக்குவரத்துத்துறை

எக்காரணம் கொண்டும் ஓட்டுநர் உரிமம் விண்ணப்பதாரருக்கு நேரடியாக வழங்கப்பட மாட்டாதுஓட்டுநர் பயிற்சிப்பள்ளி முகவரியை குறிப்பிட்டிருந்தால் ஓட்டுநர் உரிமம் தற்காலிகமாக முடக்கப்படும்
ஓட்டுநர் உரிமம் இனி விரைவு அஞ்சலில் மட்டுமே அனுப்பப்படும்: தமிழ்நாடு போக்குவரத்துத்துறை
Published on

பிப்ரவரி 28 முதல் ஓட்டுநர் உரிமங்கள், பதிவுச்சான்றுகள் விரைவு அஞ்சலில் மட்டுமே அனுப்பப்படும். எக்காரணம் கொண்டும் ஓட்டுநர் உரிமம் விண்ணப்பதாரருக்கு நேரடியாக வழங்கப்பட மாட்டாது என்று தமிழ்நாடு போக்குவரத்துத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதில்,வாகன், சாரதி மென்பொருளில் அலைபேசி எண், முகவரி தவறாக தெரிவித்திருந்தாலும் விரைவு அஞ்சலில் அனுப்பப்படாது. ஓட்டுநர் உரிமம் தபாலில் டெலிவரி செய்யப்படாமல் திரும்ப பெறப்பட்டாலும் நேரில் ஒப்படைக்கப்பட மாட்டாது. விண்ணப்பதாரரிடமிருந்து உரிய ஸ்டாம்ப் ஒட்டப்பட்ட சுய முகவரியிட்ட தபால் பெறப்பட்டு அதில் தான் அனுப்பப்படும் என்று போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

மேலும், ஓட்டுநர் பயிற்சிப்பள்ளி முகவரியை குறிப்பிட்டிருந்தால் ஓட்டுநர் உரிமம் தற்காலிகமாக முடக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com