குடிநீர் வாரிய குறை தீர்க்கும் கூட்டம் 9-ந்தேதி நடக்கிறது

சென்னை குடிநீர் வாரிய குறை தீர்க்கும் கூட்டம் வருகிற 9-ந்தேதி அனைத்து பகுதி அலுவலகங்களிலும் நடக்கிறது. பொதுமக்கள் பயன்பெற வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு பகுதி அலுவலகத்திலும் ஒரு மேற்பார்வை பொறியாளர் தலைமையில் நடக்கிறது.
குடிநீர் வாரிய குறை தீர்க்கும் கூட்டம் 9-ந்தேதி நடக்கிறது
Published on

சென்னை:

சென்னை குடிநீர் வாரிய குறை தீர்க்கும் கூட்டம் வருகிற 9-ந்தேதி (சனிக்கிழமை) அனைத்து பகுதி அலுவலகங்களிலும் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடக்கிறது. இந்த கூட்டத்தின் வாயிலாக பொதுமக்கள் பயன்பெற வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு பகுதி அலுவலகத்திலும் ஒரு மேற்பார்வை பொறியாளர் தலைமையில் நடக்கிறது.

இக்கூட்டத்தில் பொதுமக்கள் பங்கேற்று குடிநீர், கழிவுநீர் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள், குடிநீர், கழிவுநீர் வரி மற்றும் கட்டணங்கள், நிலுவையில் உள்ள கட்டணங்கள், புதிய இணைப்புகள் தொடர்பான சந்தேகங்களை நேரில் மனுக்கள் வழியாக தெரிவித்து பயன்பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com